கூடலூர் அருகே செருமுள்ளி பகுதியில் நேற்று இரவு நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செருமுள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதன் இவரது மகன் கண்ணதாசன்(45) இவருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆனதாகவும் சாரதா என்ற மனைவியும் சரண்டா (15) சந்தியா (11) என்ற இரு மகள்களும் சரத்குமார் (13) ஒரு மகனும் உள்ள நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தேவர் சோலை காவல்துறைக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கண்ணதாசன் மற்றும் மனைவி சாராத இடையே கடந்த இரண்டு நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்ததாகவும் நேற்று இரவு கண்ணதாசன் அளவு கடந்த போதையில் தள்ளாடிய நிலையில் வீட்டுக்கு சென்றதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்,இதனைத் தொடர்ந்து கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் சப்,இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் ராமேஸ்வரன் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,கண்ணதாசனிடம் நாட்டுத் துப்பாக்கி வந்தது எப்படி அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது சுடப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் பிறகு தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது





