• Fri. Jun 2nd, 2023

ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…

Byகாயத்ரி

May 24, 2022

வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் உலகிலேயே தென் ஆப்பிரிக்கா நாடான வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகிலேயே அதிக பட்சமாக ஹாங்காங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலின் சுமார் 200 ரூபாய்க்கும், நெதர்லாந்தில் 170 இரண்டு ரூபாய்க்கும், நார்வேயில் 170 ரூபாய்க்கும், டென்மார்க்கில் 162 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகின்றது. இதையடுத்து இந்தியாவுக்கு அடுத்தப்படியாக ஜப்பானில் 93 ரூபாய்க்கு, சீனாவில் 74 ரூபாய்க்கு, வங்கதேசத்தில் 77 ரூபாய்க்கு, பாகிஸ்தானில் 59 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. உலகிலேயே மிகக் குறைவாக ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வெனிசுலா நாட்டில் மற்றும் விற்பனையாகி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *