• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நித்தியின் உயிரை காப்பாற்ற இலங்கை அரசிடம் கடிதம்…

Byகாயத்ரி

Sep 3, 2022

எனது உயிரை காப்பாற்றுங்கள் என நித்தியானந்தா இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . பெங்களூரு அருகே ஆசிரமம் நடத்தி கொண்டிருந்த நித்தியானந்தா, பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தலைவரானார். இந்த நிலையில் கைலாசா நாட்டில் அவர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்றும் கைலாசாவில் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் எனவே உடல் குறைபாட்டை சரிசெய்ய இலங்கை தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசுக்கு நித்தியானந்தா கடிதம் எழுதியுள்ளார்.