• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நீலகிரி அருகே ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு பகுதிகளில் அருகே கிராமங்களில் அதிகரித்து வரும் சிறுத்தைகளின் அட்டகாசத்தால் கிராம மக்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது..
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு பகுதிகளான பனஞ்சரா, வெட்டுவாடி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக எருமாடு பஜார் அருகே அரிய வகை ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. கேமிரா வைத்து வனத்துறை கண்காணித்தபோது அவை தென்படவில்லை. இந்நிலையில் எருமாடு பகுதிகளில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. நரிவளப்பு பகுதியில் ஒரு ஆட்டை கடித்து கொன்றுள்ளது‌. மேலும் வெட்டுவாடி பகுதியில் கணபதி நகர் பகுதியில் ஆடு ஒன்று காணாமல் போன நிலையில் ஒரு ஆட்டை விலங்கு கடித்து போட்டு விட்டு சென்றுள்ளது‌. இதேபோல் பனஞ்சரா பள்ளியரா பகுதியில் 1 ஆட்டை கொன்று தின்று விட்டு மற்றொரு ஆட்டை கொன்று எடுத்து சென்றுள்ளது.

இன்னிலையில் வர்கீஸ்.விஜெய். அய்யப்பன், சண்முகராஜ் போன்றோர்களின் ஆடுகளை கொன்றுள்ளது.
மேலும் பல இடங்களில் இது போன்று வளர்ப்பு ஆடுகளை கொன்று வருகிறது. எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை காலை அப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.