• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பகுதி கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ByN.Ravi

Aug 17, 2024

மதுரை,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசிவெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பொதுமக்கள் கூழ்காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர். சண்முகவேல்பூசாரி, பூஜைகள் செய்தார்.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். திருக்கோவில் சார்பாக பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.செ யல்அலுவலர் இளமதி,கோவில்பணியாளர்கள் அர்ச்சகர் சண்முகவேல் பூபதி,கவிதா,வசந்த் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேபோல், சோழவந்தான் திரௌபதிஅம்மன்கோவில், பத்ரகாளியம்மன் கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில், திருவேடகம் துர்க்கை அம்மன் கோவில், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் கோயில், சித்தி விநாயகர் கோயில், வரசித்தி விநாயகர், கோமதி புரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம் உள்பட இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசிவெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.