• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் 4வது ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ByN.Ravi

Aug 9, 2024

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் கூழ்காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கினர். சண்முகவேல்பூசாரி பூஜைகள் செய்தார்.இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். திருக்கோவில் சார்பாக பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. செயல்அலுவலர் இளமதி, கோவில்பணியாளர்கள் அர்ச்சகர் சண்முகவேல் பூபதி, கவிதா, வசந்த் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்,இதேபோல் சோழவந்தான் திரௌபதிஅம்மன்கோவில், பத்ரகாளியம்மன் கோவில்காடுபட்டி,திரௌபதி அம்மன்கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில் திருவேடகம் துர்க்கை அம்மன் கோவில்உள்பட இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது.
மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர், சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி, கருட பஞ்சமி முன்னிட்டு, இக்கோயிலில் வராகி அம்மன் சன்னதியில், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. இதை அடுத்து, கருடாழ்வார், வராகி அம்மன், துர்க்கை அம்மன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இக்கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், வராகி அம்மன் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகிறது.