• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோடை வெயிலை தணிக்க குதூகல குளியல்

ByG.Suresh

May 4, 2024

கோடை வெயிலை தணிக்க காளையார் கோவில் சொர்ணா காளீஸ்வரர் கோவிலில் சொர்ணவள்ளி யானைக்கு தினந்தோறும் குதூகலமாக குளியல்

சிவகங்கை மாவட்டம் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலில் உள்ள சொர்ணவள்ளி யானை 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், கோவில் வாசலில் நிற்கும் கோவில் யானை சொர்ணவல்லிக்கு பழம், பிரசாதம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது வாடிக்கை. கோவிலில் நடைபெறும் திருவிழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள், பூஜைகளில் கோவில் யானை சொர்ணவல்லி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வருகிறது.

கோடை வெயிலை சமாளிக்க குதூகல குளியல் இந்த யானையை பாகன் சரவணன் பராமரித்து வருகின்றனர். சொர்ணவள்ளி யானையை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளை கோவிலுக்கு சொந்தமான குளத்தில் குளிக்க வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, சுட்டெரிக்கும் கோடை வெயில் தொடங்கியுள்ளதால் தினமும் காலை, மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் குளத்தில் குளிக்கும் யானை, தற்போது கூடுத ல் மகிழ்ச்சியில், மணிக்கணக்கில் குளத்தில் குதூகல குளியல் போட்டு வருகிறது. கரையேற மறுக்கிறது

யானை பாகன் குளத்தை விட்டு வெளியேறினாலும், குழந்தையை போல், யானை குளத்தை விட்டு வெளியேற மறுத்து குளியலில் ஆர்வம் காட்டி வருகிறது. தும்பிக்கையால் தண்ணீரை உடலில் இரைத்து உற்சாகமடைகிறது.