• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு…

கனமழையினால் பாதிக்கப்பட்ட செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கபட்டன. குறிப்பாக விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி கடும் இழப்பை சந்தித்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் முன்னிலையில் இன்று கனமழையினால் பாதிக்கப்பட்ட செண்பகராமன்புதூர், செம்பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தனர்.