அரியலூரிலுள்ள பிஎன் எம் திருமண மஹாலில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா, தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல் விருது விழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் க. இராமசாமி வழிகாட்டுதலின்படி நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் செயலாளர் முனைவர் கதிர் .கணேசன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அமைப்பின் துணைத் தலைவர் புலவர் சி இளங்கோ, அமைப்பின் துணைச் செயலாளர் கு .ஜோதி இராமலிங்கம், இணைச் செயலாளர் ரெ.செல்ல பாண்டியன் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் அ.நல்லப்பன் விழா நோக்க உரையாற்றினார் .

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ கு.சின்னப்பா பங்கேற்று, திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து, திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர் தமிழறிஞர்கள் இர. அரங்கநாடன் , வே. தேவநேசன் ஆகிய இருவருக்கும் தமிழ் பண்பாட்டுச் செம்மல் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வாழ்நாள் சாதனையாளர்கள் புலவர்சி .பன்னீர்செல்வம், எல் .யோபின், சரவணப்பெருமாள் , இ கே. இராமசாமி, ஆர்பி கலியபெருமாள், க. அன்புத்சித்திரன் , யோகா ப .ஹரி பிரசாத், செல்வி சர்வாணிக்கா ,தங்க சிவமூர்த்தி, சி. மணிவண்ணன்,தமிழ் களம் இளவரசன், முனைவர் சிற்றரசு, கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சோபனாபன்னீர்செல்வன்,ப .பஞ்சாபிகேசன், வே பழனியப்பன், தேன்கூடுக .சின்னதுரை ,நல்லாசிரியர்கள் எமல் டா குயின் மேரி, த .ஆறுமுகம்,
ம குணபாலனி, பி .சார்லஸ்ஆரோக்கியசாமி, த . பெரியசாமி, இன்னிசை கலை ஞானி ப .வீரமணி உள்ளிட்டோர் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமை ப்பு சார்பில் விருது கள் வழங்கி கௌரிவிக்கப்பட்டனர்.நிறைவாக,கவிஞர், எழுத்தாளர், பொறிஞர் தி .அறிவானந்தம் எழுதிய ஞாபக மழை (பிழை), நட்சத்திர உணவுகள் ,தமிழன் ஒரு பொறியியல் பார்வை 3 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

புத்தகத்தை அமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் வெளியிட எம்எல்ஏகு.சின்னப்பா பெற்றுக்கொண்டார். முடிவில் அமைப்பின் பொருளாளர் கொ.வி.புகழேந்தி நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.





