• Fri. Jan 24th, 2025

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து

ByP.Thangapandi

Jun 12, 2024

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணித்தேவர். விவசாயியான இவர் இதே கிராமத்தின் வளர்ச்சிகள், கோவில் திருவிழா உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவின் பெரிய தேவர் என்ற பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

இன்று உசிலம்பட்டியில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் அய்யனார்குளத்திலிருந்து வந்து கொண்டிருந்த போது தி.விலக்கு பகுதியில் மதுரையிலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது பின் பக்கமாக மோதியுள்ளது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணித்தேவர் மீது அரசு பேருந்தின் முன்பக்க டயர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலிசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதவு செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.