தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் ஆளுநரின் ஆணைப்படி தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள, செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பிழை திருத்துபவர்கள் ஆகியோர் பணியிலிருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதியாக ரூ.25,000, ரூ.40,000, ரூ.50,000, ரூ.2,00,000 என வழங்கபட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி பத்திரிகைத்துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்துவிட்டால் ரூ.5,00,000 என்றும், 15 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்துவிட்டால் ரூ.3,75,000 என்றும்,10 ஆண்டுகள் பணிபுரிந்து இறந்துவிட்டால் ரூ.2,50,000 என்றும் மற்றும் 5 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்து இறந்துவிட்டால் ரூ.1,25,000 என்றும் நடைமுறையிலுள்ள விதிகளின்படி குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.இவற்றை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தில் உதவி பெற உரிய சான்றிதழ்களுடன் சம்பந்தபட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலணைக் குழுவே இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான விண்ணபங்களையும் பரிசீலிக்கும் என்றும் அந்தக் குழுவின் பிரிந்துரையின் அடிப்படையில் ஆணைகள் வெளியிடப்படும்.இதற்கான செலவீனங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.இத்திட்டம் அரசாணை வெளியிடும் நாள் முதல் அமல்படுத்தப்படும் என்று செய்தித்துறை மற்றும் ஆளுநரின் ஆணைப்படி செயல் படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.