• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

நடுக்கடலில் இலங்கை கப்பல் மோதியதில் மீன்பிடி படகு மூழ்கி ஒருவர் மாயம்…

இலங்கை கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்ட கப்பல் மோதியதில் நடுக்கடலில் தமிழக மீன்பிடி படகு மூழ்கியது ஒருவர் மாயமானர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர் அடுத்த கோவளம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது ரோந்து கப்பல் மோதியதில் விசைப் படகு கடலில் மூழ்கியது.

இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கினர் அவர்களில் சுகந்திரன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் படகு ஓட்டி ராஜ்கிரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.