• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி விவசாயம் குறித்து விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது,
நீலகிரி மாவட்டம் உபாசியில் நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தலைமையில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ் பி அம்ரித் ஐஏஎஸ் மற்றும் தேயிலை மேலாண் இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் டாக்டர் மோனிகா ரானா ஆகியோர் முன்னிலையில் சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


இதில் தொழிலாளர்கள் பற்றாக்குறை சமாளிக்க மானிய விலையில் இலை அறுவடை செய்யும் இயந்திரம் கத்தரிக்கும் இயந்திரம் மற்றும் மருந்து தெளிப்பான்கள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு உபகரணங்களும் வழங்கப்பட்டது,நடப்பு நிதியாண்டில் சுமார் 364 பயனாளிகள் விவசாய இயந்திரங்களை மானிய விலையில் பெற ரூபாய் 78,83,656- மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 14 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1,08,26,337 மற்றும் 37,30,781 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்றும் கனரக வாகனங்கள் வாங்க 33,45,500 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது,ஆக மொத்தம் இந்த நிதி ஆண்டில் வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக ரூபாய், 4,13,89,451- வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பின்பு ஆ ராசா உரையாற்றுகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டேன்டீ தோட்ட தொழிலாளர் பிரச்னை குறித்து எதிர் கட்சிகள், கலைஞர் துவங்கி வைத்தார் மகன் ஸ்டாலின் முடித்து வைத்தார் என்று விமர்சனங்கள் வருகின்றது ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் டேன்டீ தொழிலாளர்களுக்கு ஓய்வுபெற்ற பிறகு அவர்கள் வசிக்க புதிய வீடு வழங்கும் திட்டத்திற்க்கு ரூபாய் 13 கோடி ஒதுக்கியுள்ளதாக தெறிவித்தார்.