துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டது. அந்த படத்தை நெட் பிளிக்ஸ் வாங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது அதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. விக்னேஷ் சிவன், முழு ஸ்க்ரிப்டையும் தயார் செய்யவில்லை என்றும், அதனால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி அடைந்து, வேறு ஒரு இயக்குநரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மகிழ்திருமேனி அடுத்த அஜித் படத்தை இயக்குவதாக பரவலாக பேசப்படுகிறது. மகிழ் திருமேனி, தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்றவர்.
இவர் ஏற்கனவே விஜய்க்கு கதை சொல்லி இருந்தார். அதையே தற்போது அஜித்துக்கு ஏற்றமாதிரி மாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியின் அம்மா கதாப்பாத்திரம் அவருக்கு ஆறுதல் சொல்லும் ஒரு காட்சியைப் பகிர்ந்து, இது உங்களுக்காக விக்னேஷ் சிவன், ஏனென்றால் இது நீங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவை விக்னேஷ் சிவன் லைக் செய்துள்ளார். ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.