தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரக்கூடிய நிலையில் இன்று கணித தேர்வு காலை முதல் பிறப்புகள் வரை நடைபெற்றது

மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவன் விக்னேஸ்வரன், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் பகுதியில் இருக்கக்கூடிய தேர்வு மையமான அமெரிக்கன் கல்லூரி பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு கணித தேர்வு எழுத வருகை தந்தார் , இன்று பகலில் அவரது தந்தை ஆறுமுகம் உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் , தேர்வு எழுதிவிட்டு உறவினர்களோடு மாணவன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

பார்வை குறைபாடு உள்ள அந்த மாற்றத்திறனாளி மாணவருடைய எதிர்கால நிலை தான் என்ன? மேலும் தன்னுடைய பெயரை கூட முழுமையாக சொல்ல முடியாமல் இருக்க கூடிய அந்த மாணவனுக்கு இது போன்ற ஒரு நிலையா என ஆசிரியர் பேட்டி

பத்தாம் வகுப்பு கணித தேர்வு எழுத வந்த மாணவன் விக்னேஸ்வரனின் தந்தை ஆறுமுகம் இறந்த நிலையில் தன்னுடைய பெயரை கூட முழுமையாக சொல்ல முடியாமல் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ஆதரவு வேறு யாரும் இல்லாத நிலையில் தந்தையின் மரணம் காரணமாக மாணவனுடைய எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.





