• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை பாண்டி கோவிலுக்கு தங்க கவசம் வழங்கிய பக்தர்

Byகுமார்

Aug 22, 2022

பிரசித்தி பெற்ற மதுரை பாண்டி கோவிலுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.


மதுரையில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில். இங்கு தமிழகம் முழுவதுமிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுடன் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொறியாளர் ராகவன் – சுபாதேவி தம்பதியினர் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர். இதனை தொடர்ந்து பாண்டி முனீஸ்வரர் சிலைக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்