• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக அரசுக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டமா? அல்லது ஓபிஎஸ்-க்கு எதிரான ஆர்ப்பாட்டமா?

Byvignesh.P

Jul 26, 2022

மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வரும் திமுக அரசை கண்டித்து, ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் ஆர்பி உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வரும் திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது.இந்நிலையில், தேனி மாவட்டத்தில் ஆர்பி உதயகுமார் தலைமையில் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்றுநடைபெற்றது.அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே நடந்த மோதலால் தொண்டர்கள் யார் பக்கம் என்று நிரூபிக்க இருவரும் தங்களது தொண்டர்கள் பலத்தை காண்பித்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையே மோதலில் ஓபிஎஸ்யின் எதிர்கட்சி துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. ஓபிஎஸ்ஸை எதிர்ப்பதற்காகவும் அவரின் சமூகத்தை சேர்ந்த உதயகுமாருக்கு பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் ஒபிஎஸ்-க்கு எதிராக பலத்தை நிரூபிக்கவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார் திமுகவுக்கு எதிராக பேசுவதை விடுத்து ஓபிஎஸ்க்கு எதிராவே அதிகம் பேசினார். ஒரு கட்டத்தில் அதிமுக அலுவலகத்தைசூரையாடியதை போல ஓபிஎஸ் வீட்டை சூரையாட நீண்ட நேரம் ஆகாது என பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக அறுவிக்கபட்ட பின் தேனி மாவட்டத்தில் நடைபெறும் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதால் ஓபிஎஸ் யின் சொந்த மாவட்டம் முழுவதிலும் இருந்து வேன்களில் தொண்டர்களை குவிந்தனர்.மேலும் கூட்டத்தை காட்டுவதற்காகவே நேற்று மதுரையிலும்,இன்று தேனியிலும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்படிருந்தது. தேனி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு இருக்காது என்பதால் வெளியூர்களிலிருந்து ஆட்களை வேன்களில் அழைத்து வந்தனர். அப்படியிருந்தும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.