நிலக்கோட்டையில் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 1977ம் ஆண்டுஒன்றாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து போட்டித்தேர்வுக்கான பயிற்சி மையத்தை துவங்கினர்.
நிலக்கோட்டையில் 2 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் 1977ம் ஆண்டு படித்த மாணவர்கள் இணைந்து “1977நிலக்கோட்டை நண்பர்கள்” என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.இந்த அமைப்பு மூலம் பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். மேலும் நீட்தேர்வு பயிற்சி மையத்தையும் துவங்கி நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக போட்டித்தேர்வுகள் எழுதும் கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில் “1977 நிலவை கலைக்கூடம்” என்ற பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க விழா நிலக்கோட்டையில் நடைபெற்றது.


விழாவில் 1977ல் படித்த மாணவரும் தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலாளராகவும் உள்ள கண்ணன் ஐ.ஏ.எஸ் பங்கேற்று புதிய பயிற்சி மைய கட்டிடத்தை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஆட்சியில் ச.விசாகன், எஸ்.பி.வீ.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று மருத்துவமாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினர்.1977ல் படித்த முன்னாள் மாணவர்கள் 86 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி செய்திருந்தார்.