• Fri. Apr 26th, 2024

80 ஆண்டுகளாக தஞ்சாவூரைக் கலக்கும் குணங்குடி தாசன் சர்பத் நிலையம்..!

Byவிஷா

Feb 27, 2023

குளிர்பானங்களில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் கூட, தஞ்சாவூர் குணங்குடிதாசன் சர்பத் நிலையத்திற்கு ஈடு இணை இல்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.
அப்படி என்ன இருக்கிறது இந்த தஞ்சாவூர் குணங்குடி தாசன் சர்பத்தில் என்று பார்த்தால், ஆச்சர்யத்தை அள்ளித் தருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இந்த குணங்குடி தாசன் சர்பத் நிலையத்திற்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி ஒரு பிரபலமான கடையை 80 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்லா என்பவர் தொடங்கியுள்ளார். கடை தொடங்கிய போது அப்துல்லாவுக்கு ஏதாவது புதியதாக செய்ய வேண்டும் எண்ணம் எழுந்துள்ளது. அதன் படி சர்பத்தில் நார்த்தாங்காய் கலக்கும் எண்ணத்தை கொண்டு, தற்போது தஞ்சாவூரையே கலக்கி கொண்டு வருகிறார். நார்த்தாங்காய் நல்ல குலுமை அதுமட்டுமின்றி தஞ்சாவூர் பகுதிகளில் எப்போவுமே நார்தாங்காய் கிடைக்கும்.
‘பத்து பங்கு நன்னாரி வேருக்கு மூன்றரைப் பங்கு ரசம் வடிக்க வேண்டும்’னு சொல்வாங்க. நன்னாரிக்கு மட்டும் இல்லை. பால், பாதாம் பிசின், நார்த்தங்காய் இப்படி எல்லாத்துக்கும் பக்குவம் உண்டு. இந்தப் பக்குவம்தான் ருசிக்கு முக்கியக் காரணம். எல்லாத்தையும் இன்றைக்கும் தவறாமல் கடைப்பிடிக்கிறோம் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை போல. தஞ்சாவூரின் அடையாளங்களில் ஒன்றாக எங்க சர்பத்தும் இடம் பிடிக்கக் காரணம் இதுதான், எங்க கடைய பத்தி நாங்களே ரொம்ப பேச விரும்பல எங்க கடைக்கு வர 90சதவீதம் பேர் ரெகுலர் கஸ்டமர் தான். அவர்களிடமே கேளுங்கள் என்று சொல்லுகிறார் கடையின் உரிமையாளர்.
மேலும் இங்கு நன்னாரி சர்பத் 25 ரூபாய்க்கும், பால் சர்பத்- மற்றும் ரோஸ் மில்க் 35 ரூபாய்க்கும், நன்னாரி பாட்டில் 90 ரூபாய்க்கும் கொடுக்கப்படுவதால் கடையில் கூட்டம் அலைமோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *