• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிவகாசி அருகே சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி..!

ByKalamegam Viswanathan

Jan 11, 2024

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் சரவணன் (18). இவர், திருத்தங்கல் சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் ரெங்கபாளையம் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்கள் இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். வண்டியை சரவணன் ஓட்டிச் சென்றுள்ளார். திருத்தங்கல் – விருதுநகர் சாலையில் தனியார் தொழிற்பயிற்சி கல்லூரி அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்வதற்கு சரவணன் முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திகேயன் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, சரவணனின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.