தேனி மாவட்ட குடிமக்கள் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு சார்பில் தீண்டாமை ,வன்கொடுமைகள் குறித்த தொகுப்பு புத்தகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ. முரளிதரனை சந்தித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி மாநில அளவில் பெறப்பட்ட தீண்டாமை மற்றும் வன் கொடுமைகள் குறித்த தொகுப்பினை 2020 ஆண்டு அறிக்கை புத்தகமாக வழங்கப்பட்டது.

மாநிலத்தில் வன்கொடுமைகள், தடுப்பு முறைகள், காவல்துறையின் செயல் திறன், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் செயல்பாடு,சிறப்பு நீதிமன்றங்கள், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 2021 ஆகஸ்ட் 19-ஆம் நாள் நடைபெற்ற கூட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயல்பாடுகள், துறைகளுக்கு இடையேயான மதிப்பீடு மற்றும் தேசிய ஆணையத்தின் பரிந்துரைகள் போன்ற பல்வேறு தகவல்கள் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

வன்கொடுமைகளை தடுப்பதற்கும் சமூக நீதியை பாதுகாப்பதற்கும் பயனுள்ளதாக பார்க்கப்படும் இந்த அறிக்கையை குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.முருகேசன்,மாவட்ட தலைவர் முத்து முருகேசன் மற்றும் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சின்னமாரி ஆகியோர் வழங்கினர்.

இதுகுறித்து இக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.முருகேசன் நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு சார்பாக 35 மாவட்டங்களின் தகவல் அரியும் உரிமை சட்டத்தின் படி தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை பெற்றுள்ளதாகவும் அதில் முதல் தகவல் அறிக்கை எத்தனை மாவட்டங்களில் பதிவாகியுள்ளது, எத்தனை வழக்குகள் நடைப்பெற்றது , எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா என்பதை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒரு தொகுப்பாக அந்த புத்தகத்தில் 2020 ஆண்டு அறிக்கையைாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு அறிக்கையை தேனி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்ததாக கூறினார்.பின் மாவட்ட ஆட்சியர் தான் ஏற்கனவே தீண்டாமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணயத்தில் இருந்ததாகவும் இதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மாவட்ட தலைவர் முத்து முருகேசன், குழு உறுப்பினர்கள் சின்னமாரி, மாரியம்மாள் மற்றும் கலாவதி உடன் இருந்தனர்.