டாடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கவினால் தான் கிடைத்தது” என படத்தின் நடிகை அபர்ணா தாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகிறபோதுபீஸ்ட் பட சமயத்தின்போதே, கவின் எனக்கு அறிமுகம். ‘டாடா’ இயக்குநர் கணேஷ், கவின் எல்லாம் நண்பர்கள். நான் இந்த கதைக்கு சரியாக வருவேன் என கவின்தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு கவினுக்கு மிகப்பெரிய நன்றி. ’டாடா’ கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்தப் படத்தில் எமோஷனலான காட்சிகள் அதிகம் இருப்பதால் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை இது. அதை உணர்ந்தே செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். குறிப்பாக, க்ளைமேக்ஸ் காட்சியில் சிறப்பான நடிப்பைத் தந்துவிட வேண்டும் என்பதற்காக ஒன்றுக்குப் பலமுறை ரிகர்சல் பார்த்தே நடித்தேன் என தெரிவித்துள்ளார்.