• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா

BySeenu

Oct 27, 2024

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா கோவை காந்திபுரம் பகுதியில் இரண்டாவது வீதியில் உள்ள தேஜஸ் ரியல் எஸ்டேட் மற்றும் புரோமோட்டர்ஸ் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர் மற்றும்
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மகாகவி பாரதி
மண்டல தலைவர் லயன் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
சிறப்பு விருந்தினராக கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து உதவி ஆணையாளர் சேகர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சுப்பு, பொருளாளர் திட்டம் பொறியாளர் தேஜஸ்வினி, மெரிட் லயன்ஸ் சங்கத்தின் வட்டார தலைவர் சந்திரசேகர்,
பீளமேடு கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பழனிசாமி, கோவை மண்டல தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, கிரீஸ், சண்முகவள்ளி, பாபு மற்றும் காவல்துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அன்பழகன்மற்றும் ,ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.