• Fri. Apr 18th, 2025

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலாறு பொருந்தலாறு வாய்க்காலில் விழுந்ததால் பரபரப்பு…

ByVasanth Siddharthan

Apr 11, 2025

பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை வாய்க்காலில் கார் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காங்கேயம் குட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் உயிர் பிழைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் பழனிக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக திறந்து விடும் வாய்க்காலில் இன்று இயற்கை எழிலை வேடிக்கை பார்ப்பதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் குட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் வாய்க்காலில் TN07 BB8555 ஹோண்டா காரை குளிப்பதற்காக ஓரமாக காரை நிறுத்தம் செய்யும் பொழுது பின்பக்கம் வளைக்கும் பொழுது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அங்கிருந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். உடனடியாக பழனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் இயந்திரம் மூலம் காரை கயிறு கட்டி மீட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.