• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் 10 ஆயிரத்தை கொண்டு வந்த யாசகர்..,

ByS. SRIDHAR

Oct 5, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டச் சேர்ந்த புல்பாண்டியன் என்பவர் தான் யாசகம் எடுத்து சேர்த்த பத்தாயிரம் ரூபாய் பணத்தினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்காக ரூபாய் 10 ஆயிரத்தை கொண்டு வந்துள்ளார்.

இது போல் அவர் எண்ணற்ற உதவிகளை செய்துள்ளார். தற்போது வரை ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் நன்கொடையாக யாசகம் அளித்த பணங்களை வழங்கியுள்ளார். புதிதாக வந்துள்ள ஆட்சி த.வெ.க ஆட்சி முதலமைச்சரிடம் இதற்கு முன்பாக மூன்று லட்ச ரூபாய் பொது நிவாரண நிதி அளித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு தேவையான உபகரணங்களையும் யாசகம் பெற்ற பணத்தை வைத்து பள்ளி குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனால் அவருக்கு பல்வேறு பாராட்டு சான்றிதழ்களும் அரசு துறை சார்பாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இதை இவர் தொடர்ச்சியாக பலமுறை பல மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரை சந்தித்து யாசகம் பெற்ற பணத்தை ஒரு ரூபாய் கூட எடுக்காமல் அப்படியே வழங்கி உள்ளார்.

இதனால் அவர் யாசகம் கேட்கும் சொல்லும்பொழுது அவருக்கு ஒவ்வொருவரும் 50 ரூபாய் 100 ரூபாய் என வேண்டாம் வாசகம் வழங்கி உள்ளனர் இதை திரட்டி ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்குவதில் இவர் குறிக்கோளாக வைத்துள்ளார்.