புதுச்சேரி மன்னாடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்,இன்று இவர் தனது மனைவியுடன் திருக்கனூர் கடைவீதிக்கு சென்று பொருள்களை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் வீடு திரும்பினார்.

வீட்டின் உரிமையாளர் முருகானந்தம் கதவை திறந்து பார்த்தபோது சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் ஆடியபடி இருந்தது, இதனால் அலறி அடித்து ஓடிய அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
ஆனால் வனத்துறை ஊழியர்கள் பாம்பை பிடிக்க வெகு நேரம் ஆகியும் வராததால் சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டார். இதில் பாம்பு பிடி வீரரான குமாரபாளையத்தைச் சேர்ந்த விநாயகம் உடனடியாக முருகானந்தம் வீட்டுக்கு வந்து படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்த நல்ல பாம்பை பிடிக்க முயன்றார்.
ஆனால் அவரிடம் சிக்காமல் படம் எடுத்தபடியே வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் சாக்குப் போக்கு காட்டிய நல்ல பாம்பை விநாயகம் லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து எடுத்து சென்றார்.
வீட்டில் இருந்த நல்ல பாம்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக படம் எடுத்த படியே இருந்ததால் அதனை பார்ப்பதற்கு ஏராளமான மக்களும் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது.