• Fri. Jan 17th, 2025

ரஜினி ரசிகரின் 49 வருட கனவு பலித்தது…

ByKalamegam Viswanathan

Jan 6, 2025

திருமங்கலம் ரஜினி ரசிகரின் 49 வருட கனவு பலித்தது. ரஜினி குடும்பத்துடன் அழைப்பு விடுத்து அவருக்கு சால்வை அணிவித்தும், பரிசுகள் புத்தாடைகள் வழங்கியும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி கௌரவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்தி வருபவரும், முன்னாள் ராணுவ வீரருமான 50 வயதுமிக்க கார்த்திக் என்பவர்,  கடந்த 49 வருடமாக ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வரும் நிலையில்,  கடந்த நான்கு வருட காலமாக தான் தொழில் நடத்தும் வாடகை கட்டிடத்தில், ரஜினிக்கு கோவில் அமைத்து அவர் நடித்த படங்களின் உருவங்களை வடிவமைத்து நாள் தோறும் பூஜிப்பதுடன்,  ரஜினிக்கு கருங்கலின்னால் ஆன 250 கிலோ எடை கொண்ட முழு உருவத்தில் சிலை அமைத்து, அதற்கு நாள்தோறும் பால், பன்னீர் இளநீர், சந்தனம் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருவதுடன், அதனை தொடர்ந்து, உற்சவராக 300 கிலோ எடை கொண்ட கருங்கல்லிலான அவரது முழு உருவ சிலைக்கு தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் 74 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவில், அவருக்கு சிறப்பு யாக பூஜைகள் நடத்தி,  தனது குடும்பத்தோடு வழிபட்டு வந்தார்.
மேலும் அவரையே குல தெய்வமாக இன்றுவரை பூஜித்துவரும் நிலையில், இதனை தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் கண்ட ரஜினி, கார்த்திக்கை சில நாட்களுக்கு முன்பு, நேரில் அழைத்து அவரை கௌரவித்ததுடன், அவரது குடும்பத்தினரையும் நேரில் வரவழைத்து, தனது இல்லத்தை முழுவதும் சுற்றி காண்பித்ததுடன், கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், கார்த்திக் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார்.