• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையத்தில் மெடிக்கல் ஷாப்பில் மருந்து கடையில் மருந்து வாங்க நின்றிருந்த 37 வயது ஆண் கீழே விழுந்து உயிரிழப்பு

ByN.Ravi

Apr 24, 2024

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்பில்) பூபால்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்.அருளப்பன் என்பவர், திருமணமாகி தனியா வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால், மருந்து
கடையில் மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அக்கம்
பக்கத்தினர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருந்து வாங்க நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.