• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கால்வாயில் குளிக்க சென்ற போது 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ByP.Thangapandi

Mar 16, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த இளமகாதேவன் மகள் யாழிசை. 10 வயதான இந்த சிறுமி ஊரிலேயே உள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தினசரி பள்ளி முடிந்து வந்ததும் இவரது வீட்டின் அருகே செல்லும் திருமங்கலம் பிரதான கால்வாயில் நீச்சல் பழகி, குளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றும் வழக்கம் போல பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த யாழிசை அருகே உள்ள கால்வாயில் குளிக்க சென்றுள்ளார்.

குளிக்க சென்ற மகள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததைக் கண்ட பெற்றோர் கால்வாய் பகுதியில் சென்று பார்த்த போது எதிர்பாராத விதமாக அதிகளவு நீர் செல்லும் பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.