• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

13 நாடுகளில் ட்ரெண்டிங்கில் “ரஞ்சிதமே பாடல் “

ByA.Tamilselvan

Nov 11, 2022

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வாரிசு திரைப்படத்தில் இருந்து ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி இருக்கிறது.
தமன் இசையில் விஜய் மற்றும் மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் சிலர் மொச்சைக்கொட்டை பல்லழகி என்ற பாடலின் காப்பி தான் என்று ரஞ்சிதமே பாடலை விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் விமர்சனங்களை தாண்டி தற்போது ரஞ்சிதமே பாடல் 13 நாடுகளில் சாதனை படைத்துள்ளது. அதாவது 13 நாடுகளில் ரஞ்சிதமே பாடலின் மியூசிக் மற்றும் பாடல் வரிகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் இது தொடர்பான தகவல் புகைப்படத்துடன் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.