• Tue. Apr 23rd, 2024

தல-தளபதியுடன் கலக்கப்போகும் திரிஷா?…. வெளியான சூப்பர் தகவல்

ByA.Tamilselvan

Nov 11, 2022

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்று சொல்லப்பட்டாலும் ரசிகர்கள் இவர்களை போட்டி நடிகர்களாகவே பார்க்கிறார்கள். இருவரின் திரை பயணமும் ஒன்றாகவே அமைந்தது மட்டுமில்லாமல் இருவரும் சரிசமமான ரசிகர்களை கொண்டு உள்ளனர். இவர்கள் பல வருடங்கள் கழித்து நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜில்லா மற்றும் வீரம் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. அதன் பிறகு தற்போது விஜயின் வாரிசு திரைப்படம், அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாக உள்ளது. எனவே யார் படம் அதிக வசூல் வசூலிக்கும் என்று இவர்களின் ரசிகர்கள் தற்போதை மோதலை துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை திரிஷா தான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. , தளபதி 67-ல் விஜய்க்கு மனைவியாக திரிஷா நடிக்க போவதாகவும்.அஜித்தின் 62-வது திரைப்படத்தில் நயன்தாரா இல்லை, திரிஷா தான் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் பொங்கலுக்கு நேருக்கநேர் மோதஉள்ள தல-தளபதி படங்களுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *