• Thu. Mar 28th, 2024

சூர்யா- ஹரி கூட்டணியில் மீண்டும் வருகிறது சிங்கம் 4

ByA.Tamilselvan

Nov 11, 2022

சிங்கம் தொடர் வரிசை படங்களை அடுத்து நடிகர் சூர்யா, ஹரி கூட்டணியில்மீண்டும் வருகிறது சிங்கம் 4 வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹரி இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சிங்கம்.இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 என தொடர்ச்சியாக ஹரி – சூர்யா கூட்டணியில் படங்கள் வெளிவந்தன.சிங்கம் 3 படத்திற்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனையால் அப்படம் நின்றுபோய்விட்டது.
இந்நிலையில், சிங்கம் 4 அப்டேட் விரைவில் வர இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் சிங்கம் சிரீஸ் இதுவரை மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.இந்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் ஹிட் ஆகியுள்ளது. தற்போது மீண்டும் சூர்யா – ஹரி கூட்டணி இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சிங்கம் 4 படத்திற்காக இவருவரும் மீண்டும் இணைகிறார்களாம்.சிறுத்தை சிவாவுடன் இணைந்து ஒரு பீரியடிக் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிங்கம் 4 படத்தின் படப்பிடிப்பில் நடிப்பார்.
இப்படத்தின் கதையை ஹரி தயார் செய்து வருவதாகவும், சூர்யா தன்னுடைய கமிட்மெண்ட்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு சிங்கம் 4 படத்தில் நடிக்கப்போகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *