• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விவாகரத்து பெறும் விளையாட்டு நட்சத்திர ஜோடி?!

ByA.Tamilselvan

Nov 10, 2022

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் இருவரும் துபாயில் வசித்துவந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். மகனுக்காக சானியா டென்னிஸ் களத்தில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்.
இதனிடையே, சானியாவும் சோயப் மாலிக்கும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. டிவி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சோயப் அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவுக்கு துரோகம் செய்துவருவதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன .கடந்த 31ஆம் தேதி இருவரும் சேர்ந்து தங்களது மகனின் பிறந்த நாளை கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்களை சோயப் மாலிக் மட்டுமே வெளியிட்டு இருந்தார். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும், ஆனால் மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.