• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர்
விட்டுமனைப்பட்டா வழங்க கோரி
கலெக்டரிடம் புகார் மனு

சென்னா சமுத்திரம் பேரூராட்சி கொல்லம் புதுப்பாளையம் ஆதிதிராவிடர், மற்றும் அருந்ததியர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் சென்னா சமுத்திரம் பேரூராட்சி உட்பட்ட கொல்லம் புதுப்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் 250க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கடந்த ஏழு தலைமுறைகளாக இதே பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று கொடுமுடி வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக ஆய்வாளர் உட்பட அதிகாரிகள் மேற்கொண்ட கிராமத்திற்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி குடியிருப்பு பகுதி மற்றும் அங்குள்ள தென்னை மரங்களை உள்ளிட்ட மற்ற மரங்களையும் சேர்த்து ஜேசிபி இயந்திரத்தை உதவியுடன் அகற்றி விட்டனர்.
இது பற்றி கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபொழுது கொடுமுடி கிராமத்தில் வசிப்பவர்களுக்கு இந்த பகுதியில் பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். ஏற்கனவே இப்பகுதிக்கு 1979லேயே குடியிருப்புகளுக்கு பட்ட அரசு வழங்கியுள்ளது.
அந்த வீட்டு மனை பட்டாக்களை அரசு அதிகாரிகள் திரும்பப் பெற்று ரத்து செய்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களாகிய எங்களுக்கே 100க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா இன்றி வாழ்ந்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள எங்கள் மக்களுக்கே வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ரத்து செய்துள்ள வீட்டுமனை பாட்டாக்களை எங்களுக்கு திரும்பி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.