• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் ..!!

ByA.Tamilselvan

Nov 5, 2022

கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சதீசை போலீசார் கைது செய்தனர்.விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்ற பின், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தப்பட்ட சதீசை 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். காவல்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், சதீஷை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தற்போது புழல் சிறையில் உள்ள சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சிபிசிஐடி போலீசாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.