• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அந்தமானுக்கு விமான சேவை தொடங்கியது

ByA.Tamilselvan

Nov 5, 2022

பராமரிப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருந்த அந்தமான் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது. அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அங்கு மோசமான வானிலை இருந்ததால் 4 நாட்களாக விமான சேவை நடைபெறவில்லை. இந்த நிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இதேபோல அந்தமானில் இருந்தும் சென்னைக்கு விமானங்கள் வரத் தொடங்கின. தினமும் 10 முதல் 14 விமானங்கள் அந்தமானுக்கு சென்று வருகின்றன.