• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 123 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 72 ஆண்கள், 51 பெண்கள் உள்பட மொத்தம் 123 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 72 ஆண்கள், 51 பெண்கள் உள்பட மொத்தம் 123 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 32 பேர், செங்கல்பட்டில் 9 பேர் உள்பட 28 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10-க்கும் மேல் உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக பதிவாகியுள்ளது. அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 29 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 29 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.