• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

டாப் 10 செய்திகள்

Byமதி

Oct 5, 2021
  1. கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை வழக்கில் நரேந்திர மோடி குற்றமற்றவர் எனக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

2.உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர்
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எந்தவொரு விசாரணையையும் சந்திக்கத் தயார் என மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

  1. தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  2. தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 102 அடியை எட்டியுள்ளது. பவானி சாகர் அணைக்கு வரும் உபரிநீர், அப்படியே வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  3. தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  4. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 1,449 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 1,548 பேர் மீண்டுள்ளனர். 16 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளனர்.
  5. இந்திய இசைக் கருவிகளின் சத்தம் மட்டுமே வாகனங்களின் ஹார்ன் சத்தமாக பயன்படுத்தப்படவேண்டும் என புதிய சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
  6. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளைச் செய்து வரும் வடகொரியாவை, “மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது” என்று ஐ.நா. கண்டித்துள்ளது.

9.இயக்குநர் ராம் – நிவின் பாலி இணையும் படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் தொடங்கியது.
நிவின் பாலியுடன் அஞ்சலி, சூரி நடிக்கும் இப்படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

10.ரஷ்யாவின் புகழ்பெற்ற இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ. இவர் எடுத்து வரும் ‘தி சேலஞ்ச்’ படத்தின் கதை, விண்வெளியில் ஏற்படும் ஒரு மருத்துவ நெருக்கடி தொடர்பானது. இந்தப் படத்தின் ஷூட்டிங்காக இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை ஜூலியா பெரெஸ்லிட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.