• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் அறிவிப்பு

ByA.Tamilselvan

Nov 2, 2022

ராஜராஜசோழன்பிறந்தநாள் விழா இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளில் அரசு விழாவாககொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளிலும், மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும், தஞ்சாவூரில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.