• Tue. May 7th, 2024

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
இன்று சென்னை வருகை..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (புதன்கிழமை) சென்னை வருகிறார்.
மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (புதன்கிழமை) சென்னை வருகிறார். விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார். மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேச உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ள நிலையில் ஸ்டாலினுடன் கூட்டணி தொடர்பாக மம்தா பானர்ஜி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *