• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மனுநீதி முகாம் நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மறமடக்கி கிராமத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் நடைபெறும் இடத்தை சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார்.


தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தழின்படி நவம்பர் முதல் தேதி மக்கள் தொடர்பு முகாம் கிராமவாரியாக நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த மறமடக்கி கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டம் நடைபெற உள்ள பொழிஞ்சி அம்மன் கோவில் வளாகத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். மேலும் அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டார்.
இந்த கிராமம் அமைச்சரின் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட அவரின் சொந்த கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.