• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நடிகைகளின் கர்ப்பத்துக்கு காரணம் இது தான்

ByA.Tamilselvan

Oct 29, 2022

சயனோரா, பார்வதி திருவோத், நித்யா மேனன் ஆகியோரின் சமூக வலைதள பதிவுகள் சில நாட்களாக சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இவர்கள் மூவரும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகைகள் பார்வதி திருவோத் மற்றும் நித்யா மேனன். இதில் பார்வதி திருவோத் 2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மற்றும் மரியான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார். மறுபுறம் நடிகை நித்யா மேனன் 2011 ஆம் ஆண்டு வெளியான நூற்றெண்பது என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். சமீபத்தில் இவர் தனுஷூடன் நடித்து வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் நித்யா மேனன் மற்றும் பார்வதி திருவோத் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கருத்தரிப்பு சோதனை செய்யும் கருவியுடன், குழந்தைக்கான நிப்பிள் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டார். இந்த பதிவு தற்போது இணைய தளத்தில் வெகுவாக வைரலாகி வருவதுடன் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் அவர் அதில் ‘உறுதியாகி விட்டது… அதிசியம் தொடங்குகிறது’ என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள், இவர்கள் கர்ப்பமாகியுள்ளதாக நினைத்து, தற்போது வாழ்த்து மழையை பொழித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகைகளின் இந்தபதிவுகள் இயக்குனர் அஞ்சலிமேனன் இயக்கவிருக்கும் “wonderwoman” படத்திற்கான ப்ரோமோ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.