• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொடர் இருசக்கர திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்….

சேலத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மூன்று வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்…..

இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது……

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில் மேடு பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார்.இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முதலாவது மாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று உறங்கியுள்ளார். காலை எழுந்து வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனே அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்தபோது மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.இது தொடர்பாக பாலு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.அன்று இரவே தாதகாப்பட்டி என்ற பகுதியிலும் மற்றொரு இருசக்கர வாகனமும் திருடப்பட்டுள்ளது. ஒரே கும்பலை சேர்ந்த இளைஞர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சிசிடிவியில் பதிவாகிய உள்ள இளைஞர்களின் முகத்தை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.