• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

டிசம்பரில் வெளியாகும் தளபதி 67 அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 27, 2022

நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடமான தளபதி 67 குறித்த அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
வாரிசு’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ‘வாரிசு’ வெளியீடுகள் குறித்த அப்டேட் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் தொலைக்காட்சியிடம் பேசுகையில், வரும் டிசம்பர் மாதம் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என அவர் தெரிவித்துள்ளார். தொலைப்பேசி வாயிலாக தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் இந்த பதிலை அளித்துள்ளார்.
இதனால், தீபாவளிக்கு விஜய்யின் படமும் வெளியாகவில்லை, என மனக்குமுறலில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, லோகேஷின் இந்த அறிவிப்பு உண்மையாகவே பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, லோகேஷ் – விஜய் கூட்டணி வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏகோபித்த வெற்றியை பெற்ற நிலையில், இந்த கூட்டணியின் இரண்டாம் படம் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. லோகேஷின் ‘கத்தி’ – ‘விக்ரம்’ பட உலகை (LCU – Lokesh Cinematic Universe) அடிப்படையாக வைத்து, தளபதி 67 உருவாகிறதா அல்லது அவற்றுக்கு தொடர்பற்ற வேறு கதைக்களத்தில் வருகிறதா என்பதுதான் டிசம்பரில் நமக்காக காத்திருக்கும் அப்டேட் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.