• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காந்தாரா பட காட்சிகள் திருடப்பட்டதா?.. பரபரப்பு புகார்

ByA.Tamilselvan

Oct 27, 2022

கன்னடத்திரைப்படமான காந்தாராவில் இடம்பெற்ற படக்காட்சிகள் திருடப்பட்டதாக கேரள இசைக்குழுவினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். காந்தாரா இப்படத்தில் பூத கோலா என்ற நாட்டுப்புற நடனமாடும் தெய்வ நர்த்தகர்கள் படும் துயரத்தையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் கேரளாவில் உள்ள தைக்குடம் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது. படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இசைக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.