• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் 31-ந் தேதி முழு அடைப்பு: பா.ஜ.க அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 27, 2022

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதா சார்பில் கோவையில் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.. கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவையில் தற்போது நடக்க இருந்த சம்பவம் அதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. நடந்த சம்பவம் சிலிண்டர் வெடிப்பு தான் காரணம் என கூறினார்கள். ஆனால் அதுதான் இல்லை. பா.ஜ.க அலுலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் தி.மு.க அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. எங்களுக்கு வந்த தகவல்படி கோவையில் 1½ டன் வெடிபொருட்கள் கிடைத்துள்ளது. கொங்கு நகரின் தலைநகராக கோவை உள்ளது. ஆனால் இங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து வருகிற 31-ந்தேதி முழு அடைப்பு நடைபெற உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்புதர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.