• Wed. May 1st, 2024

வசூலை குவிக்கும் கார்த்தியின் சர்தார்

ByA.Tamilselvan

Oct 25, 2022

தீபாவளி வெளியீடாக வந்துள்ள நடிகர் கார்த்தியின் சார்தார் வசூலை வாரிக்குவித்துவருகிறது.இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள 3-வது படம் சர்தார். காஷ்மோரா படத்திற்கு பிறகு கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், ராஷிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோருடன் நடிகை லைலா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உளவாளி தொடர்பான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சர்தார் திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது
இந்நிலையில் சர்தார் திரைப்படம் முதல்நாளில் சுமார் 6.91 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரும் நாட்களில் இந்த வசூல் கூட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அதையடுத்து சனிக்கிழமை குறைந்த வசூல், ஞாயிற்று கிழமையில் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மூன்று நாளில் மொத்தமாக 20 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் சர்தார் படம்தான் வசூலில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்தார் வசூல்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக சர்தார் திரைப்படம் வசூலில் வெறலெவலை அடையும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *