• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்களுக்கு போனஸ் …தமிழக அரசு அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 14, 2022

தீபாவளி பண்டியைகையொட்டி, தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் கருணைத் தொகை 1.67% என மொத்தம் 10% வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.