• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாலமுருகன் வயது 38 மேலையூர் மற்றும் விஜயகாந்தி வயது 37 நத்தபுரக்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் 17 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி இறுதியாக சிக்கிம் எல்லையில் தங்களது சேவையை நிறைவு செய்துகொண்டு இன்று ரயில் மூலம் மானாமதுரை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு வைகை பட்டாளம் மற்றும் சிவகங்கை சீமை ராணுவ வீரர்கள் அமைப்பின் சார்பில் பட்டாசுகள் வெடித்து வழி நெடுகிலும் மேளாதளம் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முன்னதாக ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களை வைகை பட்டாளம் மற்றும் சிவகங்கை சீமை அமைப்பினர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் இல்லங்கள் வரை அழைத்துச் சென்று கௌரவப்படுத்தினர் இந்நிகழ்வை மானாமதுரை பொதுமக்கள் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.