• Mon. Apr 29th, 2024

திருப்பதியில் நாளை மகா தேரோட்டம்

ByA.Tamilselvan

Oct 3, 2022

திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடைபெறும்
.திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழா 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார். 8-வது நாளான நாளை காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார். 9-வது நாளான நாளை மறுநாள் காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *